Saturday, February 20, 2010

இனியொரு விதி செய்வோம்!..

நேற்றைய பொழுது வேகமாக சென்றது போலிருந்தது கவிதாவுக்கு. "இன்றைக்கு இன்னமும் என்னால எழும்ப முடியவில்லை" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள். மண்டை விண் விண்ணென்று வலித்தது. தலையினில் சிந்தனைப் பாதங்கள் ஒரு சித்து விளையாட்டே செய்து முடித்திருந்தன. எங்கு செல்வது? எப்படி செல்வது? யாரிடம் கேட்பது? என்று ஒரு பெரும் சிந்தனைப் போரே நடந்து முடிந்திருந்தது அவள் மனத்திடலில். "ஆம், இண்டைக்கு ஒரு முடிவு எடுத்தே தீர வேணும். ஏன் எல்லோரும் என்னை ஏமாற்றுகிறார்கள்? இனி நான் அழுவதில்லை. ஆண்டாண்டு காலமாய் அந்நியனை எதிர்த்துப் போராடிய மானமிக்க தமிழ்ப்பரம்பரையில் வந்துவிட்டு ஏன் கலங்கவேண்டும்?" என்றெல்லாம் தன்னைத் தானே திடப்படுத்திக் கொண்டாலும் கண்ணோரம் கசியும் துளிகளைத் தடுக்க முடியவில்லை அவளால்.

கவிதா கனடாவுக்கு வந்து வெறும் நாற்பத்தைந்து நாட்கள் தான் ஆகியிருந்தன. யாழில் தமிழ்க்குடும்பத்தில் தலை மகளாகப் பிறந்து, நற்கல்வி கற்று, பல்கலைக்கழகம் போகும் வேளையில் தான் நல்லதம்பி மாமா இதை ஆரம்பித்தார். "உனக்கு இனிக் கல்யாணம் இங்கே பேசலாம் எண்டு இருக்கிறன் பிள்ளை. இங்க கனடாவுக்கு நீ வந்தால் உன்ட குடும்பத்தைக் கரையேத்தலாம்" என்றவர் சொன்னபோது அதுவே சரியென்றும், கட்டாயம் செய்தாகவேண்டுமென்றும் பட்டது. இவ்வளவு நாளும் தந்தையில்லாமல் தன்னையும் தன் இரு தங்கைகளையும், தம்பியையும் வளர்க்க அம்மா பட்ட பாடுகள் கண்முன்னே நிழலாடின. இந்த வாய்ப்பைத் தந்த கடவுளுக்கு நன்றி சொன்னாள்.

அவசரமாக நடந்தேறிய கல்யாணம் ஒரு கனவினைப் போல இருந்தாலும், மாமா மேல் கொண்ட நம்பிக்கையும், தன் குடும்பத்தின் தேவையும் அவளின் கணவனைப் பற்றி மேலதிக விசாரணைகளுக்கு இடங் கொடுக்கவில்லை. திருமணத்தின் பின் பாஸ்போர்ட், மெடிக்கல், மற்றும் விசா எல்லாம் எடுத்து முடிந்து அவள் கனடா வந்து சேர ஒரு வருடம் ஓடி விட்டிருந்தது. அந்த இடைப்பட்ட காலப் பகுதியில் தன் கணவன் தனக்கு எடுத்திருந்த தொலைபேசி அழைப்புக்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றாலும், அவர் வேலையாக இருந்திருக்கலாம் என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள். எல்லாவற்றையும் விட தன் கணவனிடம் சென்று சேரப் போவதே பெரும் நிம்மதியைக் கொடுத்தது.

வந்த புதிதில் இரண்டு மாதங்கள் கரைந்து போனதுபோல இருந்தது. அவள் கணவன் நிரஞ்சன் அவளை எந்தவிதக் குறையுமில்லாமல் பார்த்துக் கொண்டான். அவன் கை நிறைய சம்பாதிக்கும் நல்ல இலட்சனமான இளைஞன். ஆனாலும் தம்மிடையே ஒரு இடைவெளி விழுவதையும், ஏதோ ஒரு வெறுமை சொல்வதையும் கவினிக்க கவிதா தவறவில்லை. "இப்பதானே சேர்ந்து வாழத் தொடங்கினோம், போகப் போக எல்லாம் சரியாகிடும்" என்று தனக்குத் தானே சமாதனப்படுத்திக் கொண்டாள்.

அன்று நிரஞ்சனின் அலுவலக அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அந்த அறைக்கு அவள் அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை. நிரஞ்சன் இல்லாத போது, ஏதேச்சையாக சுத்தம் செய்யத் தொடங்கியபோது தான் அவள் அந்தப் புகைப்படத்தைக் கண்டாள். அதில் தன் கணவன் ஒரு வேற்று மொழிப் பெண்ணுடனும், சிறு குழந்தையுடனும் சேர்ந்து நின்று சிரித்துக்கொண்டிருந்தான். அந்தக் குளிரிலும் உடல் வியர்த்து, தலை சுற்றியது. பூமி பிளந்து தன்னை மட்டும் விழுங்குவது போலத் தோன்றவே அப்படியே தரையில் அமர்ந்தாள். மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்து தன் கண்களால் உறுதி செய்தாள். அன்றிரவு உணவுக்குப் பின் நிரஞ்சனிடம் அந்தப் புகைப்படத்தைக் காட்டினாள். அவன் முதலில் அதிர்ந்தது போல் தோன்றினாலும், பின் சுதாகரித்தான். "ஆம், நீ கேட்கப் போறதுக்கு பதில் உண்மை தான். எனக்கு ஏற்கனவே ஒரு குடும்பம் இருக்கு. எவளவோ சொல்லியும் கேட்காமல் அம்மா தான் குடும்ப மரியாதை போயிடும் என்று சொல்லி உன்னைக் கட்ட வச்சிட்டா. நீ கவலைப்படாதே. நான் உன்னை ஒரு போதும் கைவிடமாட்டன்." என்று சொல்லிவிட்டு விடு விடுவென வெளியேறிவிட்டான்.

கவிதாவின் கற்பனைக் கோட்டைகள் சரிந்து விழத்தொடங்கின. வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகி தன்முன் விரிந்து கிடப்பதை உணர்ந்தாள். இது தான் செயற்படவேண்டிய தருணம் என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. தனக்குரிய பொருட்களை எல்லாம் பொதிசெய்து கொண்டாள். நிரஞ்சன் வரும் வரை காத்திருந்து தன் முடிவைக் கூறினாள். அவன் அவளுக்கு அளித்திருந்த பரிசுப் பொருட்கள் உட்பட, மண விலக்குக்கான பூரண சம்மதக் கடிதத்தையும் அவனிடம் கொடுத்தாள். பூஜை அறைக் கதவைத் திறந்து தாலியைத் தட்டில் வைத்தாள்.

அரசாங்கம் அவளுக்கு அளித்திருந்த வீட்டுப் பகுதியை நோக்கி அந்த வாடகைக் கார் பயணித்தது. தூரத்தில் நிரஞ்சன் ஒரு புள்ளியாகி மறைந்து கொண்டிருந்தான். பனி கழுவிச் சென்ற தார் சாலையில் கார் சென்றபோது அந்தத் தெரு போல அவள் மனதும் தெளிவாக..

Monday, September 7, 2009

சுனாமி!

காந்தக் கண்களில் நீ
என்னை களவாடிய பொது நான்
நினைக்கவில்லை காதல்
இவளவு சுகமா?.
உன் காதல் அலை அடிக்கும் என்
இதய கடலில் என்றும் சுனாமிதான்.

கனவுகளில்,

எங்கும் சத்தம்
அமைதி தேடி அலைகின்றேன்
உன் நினைவுகளை சுமந்த -என்
இதயத்துடன்.
வலிக்கவில்லை என் கால்களுக்கு
வானதில் மிதக்கிறேன்.
உணர்வுகள் புத்துயிர் பெறுகின்றது
காலையில் அம்மா தரும் காப்பி போல,
நீ வருகின்றாய் என் கனவுகளில்
நீண்ட துரம் செல்கின்றோம்.
கண்அவை தொலைத்த பொது
கண் கனக்கிறது கண்நேரில்
புரிகின்றது உனக்கும் எனக்கும் ஆனா
ஈடைவெளிகள்
என்றாலும் அதை நிரப்ப காலம் கணியடும்
அது வரை நம் கனுவுகளில் கலந்திருப்போம்.

Saturday, July 4, 2009

ஆர்தர்...

குறும்புகளும் வம்புகளும்
கூடிப் போனதால்
நினைவில் என்றும் நிற்கிறாய்;
நீ;

அடிக்க வருகின்றேன் நான்;
ஆனால் மூழ்கிப் போகின்றேன்
உன் கன்னம் விழும் குழியில்;

முரட்டுப் பயலே..
நீ வந்து தரும் முத்தமதில்
முழுதும் மறக்கின்றேன் நொடிப் பொழுதில்.!

என் மகள்!

சிரிக்கின்றாள் என் தேவதை - அச்
சிரிப்பினில் சிக்கி
சிறு குழந்தையானேன் நான்!